Legends League: ஆஷ்லி நர்ஸ் அதிரடி சதம்.. குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா கேபிடள்ஸ்

Published : Sep 17, 2022, 09:44 PM IST
Legends League: ஆஷ்லி நர்ஸ் அதிரடி சதம்.. குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா கேபிடள்ஸ்

சுருக்கம்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் இந்தியா கேபிடள்ஸ் அணியில் ஆடிய ஆஷ்லி நர்ஸின் சதத்தால் 20 ஓவரில் 179 ரன்களை குவித்த இந்தியா கேபிடள்ஸ் அணி, 180 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு ஆடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது.

இன்றைய போட்டியில் வீரேந்திர சேவாக் தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஜாக் காலிஸ் தலைமையிலான இந்தியா கேபிடள்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டனில் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் கேப்டன் சேவாக் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - ஆளாளுக்கு ஒண்ணு சொல்வாங்க.. நான் தான் அன்னைக்கே சொல்லிட்டனே! கவாஸ்கர் மீது சாஸ்திரிக்கு அப்படி என்ன கோபம்..?

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

வீரேந்திர சேவாக் (கேப்டன்), கெவின் ஓ பிரயன், பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), மன்வீந்தர் பிஸ்லா, திசாரா பெரேரா, யஷ்பால் சிங், ரயாத் எம்ரிட், மிட்செல் மெக்லனகன், க்ரேம் ஸ்வான், கேபி அப்பன்னா, அசோக் டிண்டா.

இந்தியா கேபிடள்ஸ் அணி:

ஜாக் காலிஸ் (கேப்டன்), சாலமன் மிரே, ஹாமில்டன் மசகட்ஸா, தினேஷ் ராம்டின் (விக்கெட் கீப்பர்), ஆஷ்லி நர்ஸ், சுஹைல் ஷர்மா, லியாம் பிளங்கெட், மிட்செல் ஜான்சன், பங்கஜ் சிங், பவன் சுயால், ரஜத் பாட்டியா.

இதையும் படிங்க - அவர் ஒருவர் போதும்.. டி20 உலக கோப்பை இந்திய அணிக்குத்தான்..! அடித்துக்கூறும் ஜெயவர்தனே

முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா கேபிடள்ஸ் அணியின் ஆஷ்லி நர்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி சதமடித்தார்.  அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஆஷ்லி நர்ஸ், 43 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்தார். அவரைத்தவிர வேறு எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. ஆனாலும் ஆஷ்லி நர்ஸின் சதத்தால் 20 ஓவரில் 179 ரன்களை குவித்த இந்தியா கேபிடள்ஸ் அணி, 180 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

எல்லை மீறிய ரசிகர்.. பொறுமை இழந்த பும்ரா.. கடும் கோபத்தில் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்!
4வது டி20 ரத்து: மேட்ச் தான் நடக்கலயே.. டிக்கெட் பணத்தை திருப்பி கொங்க.. ரசிகர்கள் ஆதங்கம்