டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

By karthikeyan VFirst Published Sep 17, 2022, 8:42 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. டி20 உலக கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இந்த டி20 உலக கோப்பையை இந்தியா அல்லது ஆஸ்திரேலியா அணி தான் வெல்லும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் ஆருடம் கூறிவருகின்றனர். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும் வலுவாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இதையும் படிங்க - இந்த சின்ன வயசுல எவ்வளவு பெரிய ஞானம்! T20WC அணியில் புறக்கணிப்பு குறித்து பெரிய மனுஷத்தனமா பேசிய சஞ்சு சாம்சன்

ஆசிய கோப்பையில் 2 முறை இலங்கையிடம் தோற்று கோப்பையை இழந்த பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டின் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வு அதைவிட கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

பாகிஸ்தான் அணியில் ஷாநவாஸ் தவானி புறக்கணிக்கப்பட்டு, ஆஸ்திரேலிய கண்டிஷனுக்கு பிரயோஜனமில்லாத, ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பே இல்லாத ரிஸ்ட் ஸ்பின்னர் உஸ்மான் காதிரை அணியில் எடுத்தது கடும் விமர்சனத்துக்குள்ளாது. கேப்டன் பாபர் அசாம் அவரது நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அணியில் எடுத்ததாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

இதையும் படிங்க - அவர் ஒருவர் போதும்.. டி20 உலக கோப்பை இந்திய அணிக்குத்தான்..! அடித்துக்கூறும் ஜெயவர்தனே

பாகிஸ்தான் அணியின் வலுவான ஆடும் லெவன்:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), இஃப்டிகார் அகமது, ஹைதர் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப்.
 

click me!