டி20 உலக கோப்பையை ஜெயிக்கணும்னா, அந்த ஒரு அணியை இந்தியா வீழ்த்தியே ஆகணும்..! கௌதம் கம்பீர் அதிரடி

By karthikeyan V  |  First Published Sep 17, 2022, 6:04 PM IST

டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால்   மட்டுமே இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியும் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 


டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து என மற்ற அணிகளும் செம வலுவாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - இந்த சின்ன வயசுல எவ்வளவு பெரிய ஞானம்! T20WC அணியில் புறக்கணிப்பு குறித்து பெரிய மனுஷத்தனமா பேசிய சஞ்சு சாம்சன்

இந்நிலையில், இந்திய அணி இந்த உலக கோப்பையை வெல்ல என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பேசிய கௌதம் கம்பீர், நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தாமல் இந்திய அணியால் உலக கோப்பையை வெல்ல முடியாது. 2007 டி20 உலக கோப்பையில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம். 2011 உலக கோப்பையில் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம். ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அந்த 2 உலக கோப்பையையும் இந்தியா வென்றது. ஆஸ்திரேலிய அணி கடும் போட்டியாளராக திகழும். எனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் இந்தியா கோப்பையை வெல்லலாம் என்று கம்பீர் கருத்து கூறியுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் அவர் ஆடாதது இந்திய அணிக்கு மாபெரும் இழப்பு..! ரோஹித்&கோ-வை அச்சுறுத்தும் ஜெயவர்தனே

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), அஷ்டான் அகர், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், ஜோஷ் இங்லிஸ், பென் மெக்டெர்மோட், க்ளென் மேக்ஸ்வெல், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸாம்பா.
 

click me!