டி20 உலக கோப்பையில் அவர் ஆடாதது இந்திய அணிக்கு மாபெரும் இழப்பு..! ரோஹித்&கோ-வை அச்சுறுத்தும் ஜெயவர்தனே

By karthikeyan VFirst Published Sep 17, 2022, 4:01 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் ரவீந்திர ஜடேஜா ஆடாதது இந்திய அணிக்கு மாபெரும் இழப்பு என்று மஹேலா ஜெயவர்தனே கருத்து கூறியிருக்கிறார்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.  ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - இந்த சின்ன வயசுல எவ்வளவு பெரிய ஞானம்! T20WC அணியில் புறக்கணிப்பு குறித்து பெரிய மனுஷத்தனமா பேசிய சஞ்சு சாம்சன்

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இடம்பெறவில்லை. காலில் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் அவர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. அணியின் முக்கியமான வீரரான ஜடேஜா, பவுலிங், பேட்டிங் இரண்டிலும் சிறந்த பங்களிப்பு செய்யக்கூடியவர் என்பதால், அவர் அணியில் இருந்திருந்தால் அது அணியின் பேலன்ஸை வலுப்படுத்தியிருக்கும். ஆனால் காயம் காரணமாக அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். அவருக்கு பதிலாக அவரைப்போலவே இடது கை ஸ்பின் பவுலிங் வீசும் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலை அணியில் எடுத்திருந்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக ஜடேஜாவின் இடத்தை அக்ஸர் படேலால் நிரப்ப முடியாது.

இதையும் படிங்க - T20 World Cup: பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன்..! இர்ஃபான் பதானின் அதிரடி தேர்வு

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள மஹேலா ஜெயவர்தனே, ஜடேஜா 5ம் வரிசையில் அருமையாக செட் ஆகியிருந்தார். டாப் 6 வரிசையில் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகிய 2 ஆல்ரவுண்டர்கள் இருந்தது இந்திய அணிக்கு வலு சேர்த்திருந்தது. பேட்டிங் ஆர்டரில் நெகிழ்வுத்தன்மையை வழங்கியது.  இந்நிலையில், ஜடேஜா இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவு. வேறு இடது கை பேட்ஸ்மேனே இல்லாததால், ரிஷப் பண்ட்டை ஆடவைப்பதற்காக தினேஷ் கார்த்திக்கை உட்காரவைப்பார்கள். இந்த பிரச்னையையெல்லாம் இந்திய அணி சரிசெய்ய வேண்டும். ஆனால் ஜடேஜா ஆடாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பு என்று ஜெயவர்தனே கூறியிருக்கிறார்.
 

click me!