அவர் ஒருவர் போதும்.. டி20 உலக கோப்பை இந்திய அணிக்குத்தான்..! அடித்துக்கூறும் ஜெயவர்தனே

By karthikeyan V  |  First Published Sep 17, 2022, 7:08 PM IST

டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றிகரமாக திகழும் என்று மஹேலா ஜெயவர்தனே கருத்து கூறியுள்ளார். 
 


டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து என மற்ற அணிகளும் செம வலுவாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையை ஜெயிக்கணும்னா, அந்த ஒரு அணியை இந்தியா வீழ்த்தியே ஆகணும்..! கௌதம் கம்பீர் அதிரடி

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், இந்திய அணி வலுவானதாகவே உள்ளது. மிகச்சிறந்த கேப்டனான ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் நல்ல பேலன்ஸான வலுவான அணியாக களமிறங்குவதால் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் வாய்ப்பு குறித்து பேசிய மஹேலா ஜெயவர்தனே, இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்புதான். ஆனாலும் ஜஸ்ப்ரித் பும்ரா அணியில் இணைந்திருப்பதும், கோலி சதமடித்து மீண்டும் அவரது ஃப்ளோவிற்கு வந்திருப்பதும் இந்திய அணிக்கு பெரிய பலம். ஆசிய கோப்பையில் பும்ரா இல்லாதது பெரும் பாதிப்பாக அமைந்தது. இந்திய அணியில் இருந்த மிகப்பெரிய ஓட்டையை அடைத்துள்ளார் பும்ரா. ஆஸ்திரேலியாவில் பும்ரா ஆடுவது பெரிய பலம். ஆஸ்திரேலியாவில் பும்ரா பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். அதனால் டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றிகரமாக திகழும் என்று மஹேலா ஜெயவர்தனே கூறியுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டில் பிசிசிஐ கொண்டுவரும் புதிய விதி..! கேப்டன்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.. அணிகள் உற்சாகம்

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

click me!