ஆளாளுக்கு ஒண்ணு சொல்வாங்க.. நான் தான் அன்னைக்கே சொல்லிட்டனே! கவாஸ்கர் மீது சாஸ்திரிக்கு அப்படி என்ன கோபம்..?

By karthikeyan V  |  First Published Sep 17, 2022, 9:06 PM IST

ஹர்திக் பாண்டியா  பற்றிய கவாஸ்கரின் கருத்து குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.
 


இந்திய அணியின் முக்கியமான வீரர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. டி20 உலக கோப்பையில் அவர் அணியின் முக்கியமான துருப்புச்சீட்டாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், அருமையான ஃபீல்டிங் என ஒரு தேர்ந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, கடந்த 2 ஆண்டுகளாக காயம் காரணமாக இந்திய அணியில் பெரிதாக ஆடவில்லை.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - அவர் ஒருவர் போதும்.. டி20 உலக கோப்பை இந்திய அணிக்குத்தான்..! அடித்துக்கூறும் ஜெயவர்தனே

ஆனால் காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸுடன் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பேட்டிங், பவுலிங் மட்டுமல்லாது கேப்டன்சியிலும் அசத்தினார் ஹர்திக் பாண்டியா. அதன்விளைவாக மீண்டும் இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்து மேட்ச் வின்னராக ஜொலித்துவருகிறார்.

டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா மேட்ச் வின்னராக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதைத்தான் கவாஸ்கரும் கூறினார்.

ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், 1985ல் ரவி சாஸ்திரி எப்படி பேட்டிங், பவுலிங் மற்றும் அபாரமான கேட்ச்சுகள் என அனைத்துவகையிலும் அசத்தினார். அதேபோலவே இந்த டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக அசத்துவார் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையை ஜெயிக்கணும்னா, அந்த ஒரு அணியை இந்தியா வீழ்த்தியே ஆகணும்..! கௌதம் கம்பீர் அதிரடி

ரவி சாஸ்திரியை பற்றி நல்ல விதமாகத்தான் கவாஸ்கர் பேசியிருந்தார். ஆனால் ஹர்திக் பாண்டியா குறித்த கவாஸ்கரின் கருத்து குறித்து பேசிய ரவி சாஸ்திரி, நான் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா தான் நம்பர் 1 ஆல்ரவுண்டர் என்று இன்ஸ்டாகிராமில் கூறிவிட்டேன். பிறகு என்ன..? 2 வாரத்திற்கு முன்பே நான் கூறிவிட்டேன். அந்த கருத்தில் கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் எதுவுமில்லை. யார் வேண்டுமானால் என்ன வேண்டுமானால் சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கிறது. என்னுடைய பார்வை மிகத்தெளிவாக இருக்கிறது என்று சாஸ்திரி கூறினார்.
 

click me!