கொஞ்சம் விட்டால் எதிரணியை ஊதித்தள்ளிடுவாரு.. ஸ்டெய்னின் கிரிக்கெட் கெரியரில் அவரை பீதியடைய செய்த இந்திய வீரர்

Published : Jun 18, 2020, 08:48 PM IST
கொஞ்சம் விட்டால் எதிரணியை ஊதித்தள்ளிடுவாரு.. ஸ்டெய்னின் கிரிக்கெட் கெரியரில் அவரை பீதியடைய செய்த இந்திய வீரர்

சுருக்கம்

தான் பந்துவீசியதில் மிரட்டலான பேட்ஸ்மேன் யார் என்று தென்னாப்பிரிக்காவின் சிறந்த பவுலர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.  

தான் பந்துவீசியதில் மிரட்டலான பேட்ஸ்மேன் யார் என்று தென்னாப்பிரிக்காவின் சிறந்த பவுலர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

இந்த தலைமுறை கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன். வாசிம் அக்ரமை போல 150 கிமீ மேலான வேகத்துடனும் ஸ்விங்கும் செய்து வீசக்கூடியவர் டேல் ஸ்டெய்ன். 

2004ம் ஆண்டிலிருந்து தென்னாப்பிரிக்க அணியில் ஆடும் டேல் ஸ்டெய்ன், 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 439 விக்கெட்டுகளையும் 125 ஒருநாள் போட்டிகளில் ஆடி 196 விக்கெட்டுகளையும் 47 டி20 போட்டிகளில் ஆடி 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

அதிகமான காயங்களால் அவதிப்பட்டதால், அவரால் சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடமுடியவில்லை. தனது கெரியரில், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி, பாண்டிங், பிரயன் லாரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், பிரண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட பல சிறந்த வீரர்களுக்கு பந்துவீசியுள்ளார். 

மிரட்டலான ஃபாஸ்ட் பவுலரான டேல் ஸ்டெய்ன், தான் பந்துவீசியதில் மிரட்டலான பேட்ஸ்மேன் சேவாக் என்றும், பவுலிங் கொஞ்சம் மிஸ் ஆனாலும் ஊதித்தள்ளிவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார். 

சேவாக் குறித்து பேசிய டேல் ஸ்டெய்ன், வீரேந்திர சேவாக் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவருக்கு பந்துவீசுவது கொடுங்கனவு. சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் முச்சதம் அடித்தார். அவரிடம் கொஞ்சம் அசந்தாலும் எதிரணிகளை ஊதித்தள்ளிவிடுவார் என்று ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான சேவாக், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரரின் பேட்டிங் அணுகுமுறையை மாற்றியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த ஒரே இந்திய வீரர் சேவாக் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதம் அடித்துள்ளார் சேவாக். பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு முச்சதமும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு முச்சதமும் அடித்துள்ளார் சேவாக் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

Shubman Gill: டி20-ல் படுமோசம்.. அதனால்தான் நீக்கினோம்.. அகர்கர் அறிவிப்பு
அந்த ஒரு தோல்வி மனசே உடைஞ்சு போச்சு.. உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித்