முடிவுக்கு வருகிறது தடை.. ஃபாஸ்ட் பவுலிங்கில் மீண்டும் மிரட்டவருகிறார் ஸ்ரீசாந்த்..!

By karthikeyan VFirst Published Jun 18, 2020, 7:05 PM IST
Highlights

ஸ்ரீசாந்த் மீதான தடை, வரும் செப்டம்பரில் முடியவுள்ள நிலையில், ரஞ்சி தொடரில் கேரள அணிக்காக ஆடவுள்ளார்.
 

கேரளாவை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த், 2005ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார். அதன்பின்னர் 2006ம் ஆண்டு டெஸ்ட் அணியிலும் அறிமுகமானார். இந்திய அணி 2007ல் டி20 உலக கோப்பையையும் 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையையும் வென்றபோது, அந்த அணிகளில் முக்கிய பங்காற்றியவர் ஸ்ரீசாந்த். 

இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக திகழ்ந்த ஸ்ரீசாந்த், 2013 ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். அதன்பின்னர் அவர் மீதான வாழ்நாள் தடை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. 

இதையடுத்து அவர் மீதான தடை வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் கிரிக்கெட் ஆடும் ஆர்வத்தில் உள்ளார் ஸ்ரீசாந்த். 

இந்நிலையில், அவருக்கு நம்பிக்கையளிக்கும் வார்த்தையை தெரிவித்துள்ளது கேரள கிரிக்கெட் சங்கம். ஸ்ரீசாந்த்தை வரவேற்க கேரள கிரிக்கெட் சங்கம் தயாராக இருக்கிறது. அவர் ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறிவிட்டால் அணியில் ஆடலாம். அனுபவமான பவுலர் அவர் என்று கேரள கிரிக்கெட் சங்க தலைவர் சஜன் கே வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

தடை முடிந்து மீண்டும் களம் காணவுள்ள ஸ்ரீசாந்த், என் மீது கேரள கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை வைத்துள்ளது. கண்டிப்பாக முழு ஃபிட்னெஸுடன் களம் காண்பேன். கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு நடந்துகொள்வேன் என்று மிகுந்த உற்சாகத்துடன் பேசியுள்ளார் ஸ்ரீசாந்த். 

ஸ்ரீசாந்த் கேரள அணிக்காக மட்டுமல்லாமல், இந்திய அணியிலும் ஆடும் ஆர்வத்திலும் உள்ளார். கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். 
 

click me!