உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்த கையோடு பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்து தவறான முடிவு எடுத்துள்ளார் என்று முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணிக்கு முதல் 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. இதில், உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 43 ரன்களில் வெளியேறினார். மார்னஸ் லபுஷேன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஷர்துல் தாக்கூரை எடுத்ததற்கு அவரால் முடிந்ததை செய்துவிட்டார் - 4 நோபால், 75 ரன்!
அப்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் மாறி மாறி பவுண்டரியாக விளாசவே ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் டிராவிஸ் ஹெட் இந்தியாவிற்கு எதிராக தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்திருந்தது. இதில், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களும், டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து இருவரும் 2ஆவது நாள் தொடங்கினர். இதில், டிராவிஸ் ஹெட் கூடுதலாக 17 ரன்கள் சேர்த்து 163 ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 288 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர்.
அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 6 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் பவுண்டரி அடித்து தனது 31ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அதோடு இங்கிலாந்தில் 7ஆவது சதத்தை அடித்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக 9 முறை சதம் அடித்த ஜோ ரூட் சாதனையை சமன் செய்துள்ளார். ஓவல் மைதானத்தில் மட்டும் 3 சதங்கள் அடித்துள்ளார். இந்தப் போட்டியில் 113 ரன்கள் எடுத்ததன் மூலமாக இந்தியாவிற்கு எதிராக 2000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
தென்னிந்திய முறைப்படி காதலியை கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணா!
ஆஸ்திரேலியாவுக்காக அதிகம் சதம் அடித்தவர்கள்:
ரிக்கி பாண்டிங் – 41
ஸ்டீவ் வாக் - 32
ஸ்டீவ் ஸ்மித் – 31
மேத்யூ ஹைடன் – 30
சர் டான் பிராட்மேன் – 29
இந்தியாவிற்கு எதிராக அதிக சதம் அடித்தவர்கள்:
ஜோ ரூட் – 9
ஸ்டீவ் ஸ்மித் – 9
ரிக்கி பாண்டிங் – 8
சர் விவி ரிச்சர்ட்சன் – 8
சர் ஹர்பீல்டு சோபெர்ஸ் – 8
இங்கிலாந்து மைதானத்தில் அதிக சதம் அடித்தவர்கள்:
சர் டான் பிராட்மேன் – 11
ஸ்டீவ் வாக் – 7
ஸ்டீவ் ஸ்மித் – 7
ராகுல் டிராவிட் – 6
இந்தப் போட்டியில் சாதனை படைத்த நிலையில், ஷர்துல் தாக்கூர் ஓவரில் கிளீன் போல்டாகி வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் 268 பந்துகளில் 19 பவுண்டரி உள்பட 121 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தற்போது வரையில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.