தென்னிந்திய முறைப்படி காதலியை கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணா!

By Rsiva kumar  |  First Published Jun 8, 2023, 2:43 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா தனது நீண்ட நாள் காதலியான ரச்சனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி பிறந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணா (பிரஷித் கிருஷ்ணா).  27 வயதாகும் பிரசித் கிருஷ்ணா கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரையில் 14 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவர் 25 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

WTC Final : நான் கேப்டனாக இருந்தா இப்படி செய்திருக்க மாட்டேன் – சவுரங் கங்குலி!

Tap to resize

Latest Videos

இதே போன்று 72 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 68 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதுவரையில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட அவர் விளையாடியதில்லை. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அடுத்து வர இருக்கும் உலகக் கோப்பை தொடருக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இப்போது தெரியாது: அஸ்வின் இல்லாதது கடைசி 2 நாளில் தான் தெரியும் – ரிக்கி பாண்டிங்!

இந்த நிலையில், தனது நீண்ட நாள் காதலியான ரச்சனா கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். தென்னிந்திய முறைப்படி இவர்களது திருமணம் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிரசித் கிருஷ்ணா மற்றும் ரச்சனா கிருஷ்ணா ஆகியோரது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதையடுத்து இன்று இவர்களது திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததே தப்பு; இதுல அஸ்வின வேறு எடுக்காம தப்பு மேல தப்பு பண்ணிய ரோகித் சர்மா!

யார் இந்த ரச்சனா கிருஷ்ணா?

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் என்ற பகுதியில் உள்ள டெல் டெக்னாலஜிஸ் கம்பெனியில் பிராடக்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார். கம்பியூட்டர் சயின்ஸ் அண்டி இன்ஜினியரிங் படித்த ரச்சனா சிஸ்கோவின் தொழில்நுட்ப உத்தி மற்றும் செயல்பாட்டுக் குழுவில் இணைந்து பணியாற்றியுள்ளார். அதன் பிறகு டெல் கம்பெனியில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரோகித் சர்மா ரூ.15 கோடி நிதியுதவி?

மாணவர்களுக்கும், தனியார் நிறுவங்களுக்கும் இடையிலான இடைவேளியை குறைக்கும் வகையில் EdTech வணிக நிறுவனத்தையும் அவர் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசித் கிருஷ்ணா மற்றும் ரச்சனா கிருஷ்ணா தம்பதிகளுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Shreyas Iyer, Bumrah, Agarwal, Padikkal & many Karnataka players attended the wedding of Prasidh Krishna. pic.twitter.com/Skzatzjugx

— Johns. (@CricCrazyJohns)

 

click me!