ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற ஷர்துல் தாக்கூர் 4 நோபாலுடன் 75 ரன்கள் கொடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடியது. இதில், உஸ்மான் கவாஜா டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 26 ரன்களில் வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழந்து 73 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்து பவுண்டரி, பவுண்டரியாக விளாசி ரன்கள் சேர்த்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்திருந்தது. இதிஸ் ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 146 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். இதில் ஒரு படி மேல் சென்ற தாக்கூர் 4 நோபால் வரையில் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவீந்திர ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் விக்கெட்டுகள் கைப்பற்றவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக இந்திய அணியில் இடம் பெற்றதற்கு தன்னால் என்ன முடியுமோ அதனை எந்த பாகுபாடு காட்டாமல் ரன்கள் கொடுத்து, நோபாலும் வீசியுள்ளார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தென்னிந்திய முறைப்படி காதலியை கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணா!