இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை வஞ்சப்புகழ்ச்சி செய்த முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Feb 17, 2020, 4:08 PM IST
Highlights

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் சிறப்பானது என்று பாராட்டிய ஸ்டீவ் வாக், கூடவே எகத்தாளமும் செய்துள்ளார். 
 

எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த பேட்டிங் அணியாக மட்டுமே திகழ்ந்த இந்திய அணி, தற்போது மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டாகவும் திகழ்கிறது. பும்ராவின் வருகைக்கு பிறகு இந்திய அணியின் பவுலிங் தரம் வேற லெவலுக்கு சென்றுவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியின் பவுலிங் தலைசிறந்து விளங்குகிறது. 

பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றுள்ளது. மேலும் நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகிய இளம் ஃபாஸ்ட் பவுலர்களும் அசத்திவருகிறார்கள்.

குறிப்பாக பும்ரா  மற்றும் ஷமியின் பவுலிங் அபாரம். உலகம் முழுதும் எங்கு ஆடினாலும், துல்லியமாகவும் நல்ல வேகத்துடனும் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டிவிடுகின்றனர். உலகின் சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் என்று பாராட்டப்படும் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை வஞ்சப்புகழ்ச்சி செய்துள்ளார் ஸ்டீவ் வாக். 

ஆஸ்திரேலிய அணிக்கு கடந்த முறை சென்றபோது, டெஸ்ட் தொடரை முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. அதன்பின்னர் இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், இந்திய அணி உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஆடினால் மட்டும்தான் அப்படி என்று தெரிவித்துள்ளார். 

Also Read - டுப்ளெசிஸின் திடீர் முடிவு.. கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி

இந்தியாவை தவிர வெளியே சென்று ஆடினால், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் சிறந்தது இல்லை என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

click me!