அஷ்வினுக்கு கேரம் பால் வீச கற்றுக்கொடுத்தது யார்..? ஸ்டார் ஸ்பின்னர் பகிர்ந்த சுவாரஸ்யம்

Published : Feb 17, 2020, 02:19 PM IST
அஷ்வினுக்கு கேரம் பால் வீச கற்றுக்கொடுத்தது யார்..? ஸ்டார் ஸ்பின்னர் பகிர்ந்த சுவாரஸ்யம்

சுருக்கம்

தனக்கு கேரம் பந்தை வீச கற்றுக்கொடுத்தது யார் என்ற ரகசியத்தை அஷ்வின் பகிர்ந்துள்ளார்.   

இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் அஷ்வின். ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டாலும், டெஸ்ட் அணியின் நட்சத்திர ஸ்பின்னராக அஷ்வின் ஜொலிக்கிறார். அதிவேக 250, 300, 350 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார். 

2010ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான அஷ்வின், இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளிலும் 111 ஒருநாள் போட்டிகளிலும் 46 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2017ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஷ்வின் ஆடவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடிவரும் அஷ்வின், டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார். 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்தில் உள்ளார் அஷ்வின். இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஷ்வின், தனக்கு கேரம் பந்து வீச கற்றுக்கொடுத்தது யார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அஷ்வின், முதல் முறையாக நான் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆட சென்று பேட்டிங் ஆடியபோது, அங்கு ஒரு பையன் சிறந்த பவுலிங் ஆக்‌ஷனுடன் பந்தை இரண்டு திசைகளிலும் டர்ன் செய்தார். அவரை அதன்பின்னர் இன்றுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இன் - அவுட் என இரண்டு பக்கத்திலும் பந்தை சுழற்றும் ஒரு சிறந்த ஸ்பின்னரை நான் இன்றுவரை பார்க்கவில்லை. நான் என் வாழ்வில் பார்த்த சிறந்த ஸ்பின்னர் அவர் தான். அவரது பெயர் எஸ்கே. அவர்தான் எனக்கு கேரம் பந்து வீச கற்றுக்கொடுத்தார். 

Also Read - அசந்த நேரத்துல அடிச்சுட்டீங்க.. அடுத்த தடவை உங்க பருப்பு வேகாது.. இந்திய அணிக்கு சவால் விடும் முன்னாள் கேப்டன்

அவரது பவுலிங்கின் மூலம் அவர் என்னை முட்டாளாக்கினார். அவரிடமிருந்து ஸ்பின்னை கற்றுக்கொள்ள விரும்பினேன். அதனால் அடுத்த 10-15 நாட்களுக்கு தினமும் காலையிலேயே சென்றுவிடுவேன். அவர் அந்த 15 நாட்களும் எனக்கு பந்துவீச்சில் பல உத்திகளை கற்றுக்கொடுத்தார். அதன்பின்னர் அவரை நான் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அஷ்வின் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

Virat Kohli Mental Health: 'நான் ஒரு போலி'னு தோணுது! - மனநலம் பற்றி கோலி ஓபன் டாக்
Vaibhav Suryavanshi: அந்த 'A' செலிப்ரேஷன்... சீக்ரெட்டை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!