அசைக்கமுடியாத இடத்தில் ஸ்மித்.. கூடாரத்தை காலி செய்த கோலி

By karthikeyan VFirst Published Sep 10, 2019, 5:10 PM IST
Highlights

ஆஷஸ் தொடரில் ஸ்மித் அபாரமாக ஆடிவரும் நிலையில், கோலி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடரில் பெரிதாக சோபிக்காததோடு இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் கோல்டன் டக் அவுட்டும் ஆனார். 

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படுகிறார்கள். விராட் கோலி தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு தரவரிசைகளிலும் முதலிடத்தில் இருந்துவந்தார். 

ஆனால் ஆஷஸ் தொடரில் ஸ்மித் அபாரமாக ஆடிவரும் நிலையில், கோலி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடரில் பெரிதாக சோபிக்காததோடு இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் கோல்டன் டக்கானார். இதையடுத்து ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தார் ஸ்மித். 

கோலி 903 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருந்த நிலையில், ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். அதன்பின்னர் ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் இரட்டை சதமும் மற்றொரு இன்னிங்ஸில் 82 ரன்களையும் குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதையடுத்து 33 புள்ளிகள் கூடுதலாக பெற்று 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கோலி, ஸ்மித்தைவிட 34 புள்ளிகள் பின் தங்கியிருக்கிறார். கடைசி டெஸ்ட்டிலும் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை தொடரும் பட்சத்தில் அவரது புள்ளிகள் மேலும் எகிறும். 

இந்திய அணி, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்டில் ஆடவுள்ள நிலையில், அந்த தொடர் முழுவதும் கோலி அபாரமாக ஆடினால் மட்டுமே ஸ்மித்தை பின்னுக்குத்தள்ள முடியும். ஆனால் அடுத்த தொடரிலேயே கோலி, ஸ்மித்தை பின்னுக்குத்தள்ளுவது இயலாத காரியம். 
 

click me!