குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியின் சோலி முடிஞ்சுதா..?

By karthikeyan VFirst Published Sep 10, 2019, 5:00 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டிருந்தனர். தென்னாப்பிரிக்க தொடரிலும் இவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். குல்தீப் - சாஹல் ஆகிய இருவரும் புறக்கணிக்கப்பட்டனர்.
 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில், அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆடவுள்ளது. தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவிற்கு வந்து 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்த தொடருக்கான டெஸ்ட் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான அணியை கட்டமைக்கும் பணியை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே தொடங்கிவிட்டது. அந்த வகையில், தோனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புறக்கணிக்கப்பட்ட குல்தீப்-சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி, தென்னாப்பிரிக்க தொடரிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டிருந்தனர். தென்னாப்பிரிக்க தொடரிலும் இவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். குல்தீப் - சாஹல் ஆகிய இருவரும் புறக்கணிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் புறக்கணிப்பு குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை கருத்தில்கொண்டு, ஸ்பின் பவுலிங்கில் வெரைட்டியை உருவாக்கும் நோக்கில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 

அணிக்கு வந்த புதிதில் சுழலில் மிரட்டிய ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் - சாஹல் ஜோடி, உலக கோப்பையில் சோபிக்கவில்லை. உலக கோப்பையில் இவர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இருவருமே ஏமாற்றினர். உலக கோப்பைக்கு முந்தைய ஒருநாள் போட்டிகளில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்த இவர்கள், உலக கோப்பையில் அதை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!