தம்பி கேப்டன்சினா என்னனு நீங்க அவருகிட்ட கத்துக்கங்க.. இங்கிலாந்து முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Apr 10, 2019, 4:21 PM IST
Highlights

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் கடும் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. பேர்ஸ்டோ, பட்லர், ஜேசன் ராய், இயன் மோர்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என வலுவாக அணியாக இங்கிலாந்து திகழ்கிறது. இயன் மோர்கன் இங்கிலாந்து அணியை அபாரமாக வழிநடத்தி செல்கிறார். 

உலக கோப்பை வரும் மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. உலக கோப்பையில் ஆடும் அணிகளை உலக கோப்பையில் ஆடும் அணிகள் விரைவில் அறிவிக்க உள்ளன. 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்பது பெரும்பாலான முன்னாள் வீரர்களின் கருத்து. உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் அந்த அணிக்கு கூடுதல் வாய்ப்பிருப்பதாக கவாஸ்கர் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்தியா, இங்கிலாந்து அல்லாமல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. ஆஃப்கானிஸ்தான் அணி கூட அபாரமாக ஆடிவருகிறது. எனவே உலக கோப்பையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். 

ஆனாலும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் கடும் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. பேர்ஸ்டோ, பட்லர், ஜேசன் ராய், இயன் மோர்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என வலுவாக அணியாக இங்கிலாந்து திகழ்கிறது. இயன் மோர்கன் இங்கிலாந்து அணியை அபாரமாக வழிநடத்தி செல்கிறார். 

ஒருநாள் அணியை இயன் மோர்கன் வழிநடத்தும் நிலையில், டெஸ்ட் அணிக்கு ஜோ ரூட் கேப்டனாக செயல்படுகிறார். இந்நிலையில் இயன் மோர்கனிடம் இருந்து ஜோ ரூட் கேப்டன்சியை கற்றுக்கொள்ள வேண்டுமென இங்கிலாந்து அணியின் முன்னள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஸ்டீவ், இயன் மோர்கனின் கேப்டன்சி மைக்கேல் வானை போன்று உள்ளது. நெருக்கடியான சூழலில் உடனடியாக சில நல்ல முடிவுகளை எடுக்கிறார் இயன் மோர்கன். சூழலுக்கு ஏற்ப சரியான முடிவுகளை எடுக்கிறார். டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் ஜோ ரூட், உலக கோப்பையில் இயன் மோர்கனிடமிருந்து நெருக்கடியான சூழலின் எப்படி முடிவுகளை எடுக்க வேண்டும் என கற்றுக்கொள்ள வேண்டும். எக்ஸ்ட்ரா கவர் அல்லது மிட் ஆன் திசையில் நின்று இயன் மோர்கனின் கேப்டன்சியை நன்கு கவனித்து ஜோ ரூட் ஒரு கேப்டனாக மேம்பட வேண்டும் என ஹார்மிசன் தெரிவித்துள்ளார். 
 

click me!