
ஐபிஎல் 2023ம் ஆண்டிலிருந்து 2027ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை பெற அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ(Zee), சோனி, ரிலையன்ஸ் உட்பட 10 நிறுவனங்கள், ரூ.29.50 லட்சத்தை நுழைவுக்கட்டணமாக செலுத்தி போட்டியிட்டன.
கடைசி நேரத்தில் இந்த போட்டியிலிருந்து அமேசான் நிறுவனம் விலகியது. அமேசான் விலகியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து 4 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. இந்தியாவிற்கான டிவி ஒளிபரப்பு உரிமை
2. இந்தியாவிற்கான டிஜிட்டல் உரிமை
3. குறிப்பிட்ட 18 போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமை
4. இந்தியா தவிர மற்ற உலக நாடுகளுக்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமை
மேற்கூறிய 4 வகை உரிமைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி, Zee மற்றும் Viacom18 ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்தியாவில் டிவி மற்றும் டிஜிட்டல் உரிமையை விட்டுவிடக்கூடாது என்பதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் உறுதியாக உள்ளது. ரிலையன்ஸில் Viacom 18 நிறுவனமும் முன்னிலையில் உள்ளது. வரும் 12ம் தேதி எந்த நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை பெற்றது என்பது தெரியவரும்.