
இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2வது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என டி20 தொடரை வென்றுவிட்டது.
2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 124 ரன்கள் மட்டுமே அடித்தது. 125 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 18வது ஓவரிலேயே இலக்கை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இலக்கு குறைவானதாக இருந்தாலும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதால் வெற்றி வேட்கையுடன் ஆடிய இலங்கை அணி, வியூகம் வகுப்பதில் கவனம் செலுத்தியதால் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது.
ஐசிசி விதிப்படி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனாகா மற்றும் அணி வீரர்கள் அனைவருக்கும் அவர்களது போட்டி ஊதியத்தில் 40% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியிலும் தோற்று, தொடரையும் இழந்த இலங்கை அணிக்கு போட்டி ஊதியத்தில் 40% அபராதமாக செலுத்தி பணமும் போயிற்று.