PAK vs WI: பாபர் அசாம், இமாம் உல் ஹக் அரைசதம்..! வெஸ்ட் இண்டீஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Jun 10, 2022, 8:52 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் 275  ரன்கள் அடித்து 276  ரன்கள் என்ற சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல்  போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி முல்தானில் இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

பாகிஸ்தான் அணி:

ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், ஷதாப் கான், முகமது நவாஸ், ஹாரிஸ் ராஃப், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அஃப்ரிடி.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், ஷமர் ப்ரூக்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), பிரண்டன் கிங், ரோவ்மன் பவல், ரொமாரியோ ஷெஃபெர்டு, அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், ஆண்டர்சன் ஃபிலிப், ஹைடன் வால்ஷ்.
 
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக்கும் கேப்டன் பாபர் அசாமும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடினர். இருவருமே அரைசதம் அடித்தனர்.

இமாம் உல் ஹக்கும் பாபர் அசாமும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 120 ரன்களை குவித்தனர். இமாம் உல் ஹக் 72 ரன்களும், பாபர் அசாம் 77 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்வரிசையில் ஷதாப் கான் மற்றும் குஷ்தில் ஷா ஆகிய இருவரும் தலா 22 ரன்கள் அடித்தனர். ஷாஹீன் அஃப்ரிடி 6 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 275 ரன்கள் அடித்து, 276 ரன்கள் என்ற சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!