
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் அணிகள் கலந்துகொண்டு விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டுவருகிறது.
கடைசியாக 2018ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நடக்கிறது. வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது.
இதையும் படிங்க - விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா? அடேங்கப்பா.. பிசிசிஐ ஒப்பந்த ஊதியத்தை விட அதிகம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் அசாதாரண சூழ்நிலையால், ஆசிய கோப்பை தொடர் இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அமீரகத்தில் தான் ஆசிய கோப்பை நடக்கப்போகிறது என்பதை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நேற்று அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தை வலுவாக பிடித்த பாகிஸ்தான்..! சிக்கலில் இந்தியா
ஆசிய கோப்பை தொடர் நெருங்கிவரும் நிலையில், அதற்கான ப்ரமோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். ஆசியாவில் எது பெரிய அணி என்பதை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தான் ஒளிபரப்புகிறது. அந்தவகையில், ஆசிய கோப்பை ப்ரமோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது. அந்த ப்ரமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.