SL vs PAK: ஃபைனலுக்கான முன்னோட்ட மேட்ச்.. டாஸ் ரிப்போர்ட்.! பாக்., அணியில் வாரிசு வீரர் அறிமுகம்

Published : Sep 09, 2022, 07:24 PM IST
SL vs PAK: ஃபைனலுக்கான முன்னோட்ட மேட்ச்.. டாஸ் ரிப்போர்ட்.! பாக்., அணியில் வாரிசு வீரர் அறிமுகம்

சுருக்கம்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஃபைனலுக்கு பாகிஸ்தானும் இலங்கையும் தகுதிபெற்றுள்ள நிலையில், ஃபைனலுக்கான முன்னோட்டமாக இன்றைய கடைசி சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன.

ஃபைனல் நடக்கும் அதே துபாயில் தான் இந்த போட்டியும் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - களத்தில் அடித்துக்கொண்ட ஆசிஃப் அலி - ஃபரீத் அகமது..! ஆப்பு அடித்த ஐசிசி

இரு அணிகளிலுமே தலா 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அணியில் சாரித் அசலங்கா மற்றும் அசிதா ஃபெர்னாண்டோவிற்கு பதிலாக தனஞ்செயா டி சில்வா மற்றும் பிரமோத் மதுஷன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்‌ஷனா, தில்ஷான் மதுஷங்கா.

பாகிஸ்தான் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷதாப் கான் மற்றும் நசீம் ஷா ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு ஹசன் அலி  மற்றும் உஸ்மான் காதிர் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். உஸ்மான் காதிர், பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் காதிரின் மகன் ஆவார். அதனால் உஸ்மான் காதிர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க - அப்படினா நான் வெளியே உட்காரணுமா..? கோலி குறித்த நிருபரின் கேள்வியால் கடுப்பான ராகுல்

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் ராஃப், உஸ்மான் காதிர், முகமது ஹஸ்னைன்.
 

PREV
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி
Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?