களத்தில் அடித்துக்கொண்ட ஆசிஃப் அலி - ஃபரீத் அகமது..! ஆப்பு அடித்த ஐசிசி

By karthikeyan VFirst Published Sep 9, 2022, 6:11 PM IST
Highlights

பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டியின்போது களத்தில் சண்டை போட்ட ஆசிஃப் அலி - ஃபரீத் அகமது ஆகிய இருவருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இந்தியாவும் ஆஃப்கானிஸ்தானும் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறின.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஃபைனலுக்கு முன்னேறின. ஃபைனல் வரும் 11ம் தேதி துபாயில் நடக்கிறது. அதற்கு முன்பாக, பாகிஸ்தான் - இலங்கை இடையேயான கடைசி சூப்பர் 4 போட்டி இன்று துபாயில் நடக்கிறது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையை தூக்கியே ஆகணும்.. மேத்யூ ஹைடனை எடுத்து கடைசி நேரத்தில் சிக்ஸர் அடித்த பாகிஸ்தான் அணி

இந்நிலையில், பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் மோதிக்கொண்ட ஆசிஃப் அலி - ஃபரீத் அகமது ஆகிய இருவருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 

பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இடையே கடந்த 7ம் தேதி நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் வெறும் 129 ரன்கள் மட்டுமே அடித்தாலும், 130 ரன்கள் என்ற எளிய இலக்கை பாகிஸ்தானை எளிதாக விரட்டவிடாமல் 9விக்கெட்டுகளை வீழ்த்தி கடைசி வரை போராடி தான் தோற்றது ஆஃப்கானிஸ்தான் அணி.

அந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. அந்த போட்டியில் ஃபரீத் அகமதுவின் பந்தில் ஆட்டமிழந்த பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி, அவருடன் மோதினார். ஃபரீத் அகமதுவை நோக்கி ஆசிஃப் அலி பேட்டை உயர்த்த, ஆசிஃப் அலிக்கும் ஃபரீத் அகமதுவுக்கும் இடையே மோதல் மூண்டது. பின்னர் மற்ற வீரர்கள் தலையிட்டு பிரித்துவிட்டனர்.

இதையும் படிங்க - Asia Cup: அவரை எடுக்காததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்! ராகுல் டிராவிட், ரோஹித்தை விளாசிய ரவி சாஸ்திரி

இந்நிலையில், ஐசிசி விதி 2.1.12-ஐ மீறி வீரர்கள் களத்தில் மோதிக்கொண்டதால், அவர்கள் இருவருக்கும் போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதத்தை அபராதமாக விதித்துள்ளது.
 

click me!