Asia Cup ஃபைனலின் முன்னோட்டம்! சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டிக்கான பாக்.,-இலங்கை அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Sep 09, 2022, 04:53 PM IST
Asia Cup ஃபைனலின் முன்னோட்டம்! சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டிக்கான பாக்.,-இலங்கை அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் மோதும் பாகிஸ்தான் - இலங்கை அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. சூப்பர் 4 சுற்று இன்றுடன் முடிகிறது. வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி நடக்கிறது.

லீக் சுற்றில் ஆஃப்கானிஸ்தானிடம் தோற்ற இலங்கை அணி, அதன்பின்னர் வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது இலங்கை. 

இதையும் படிங்க - Asia Cup: அவரை எடுக்காததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்! ராகுல் டிராவிட், ரோஹித்தை விளாசிய ரவி சாஸ்திரி

லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்று, ஹாங்காங்கிடம் ஜெயித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி, சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது.

இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறி அதிர்ச்சியளித்தது. இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறின.

எனவே பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் வரும் 11ம் தேதி துபாயில் நடக்கும் ஃபைனலில் மோதுகின்றன. அதற்கு முன்பாக, அந்த ஃபைனலின் முன்னோட்டமாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இன்று துபாயில் நடக்கும் கடைசி சூப்பர் 4 சுற்று போட்டியில் மோதுகின்றன. இந்த 2 அணிகளும் ஃபைனலில் மோதவுள்ளதால், இந்த போட்டி ஃபைனலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி, அதே உத்வேகம் மற்றும் உற்சாகத்துடன் ஃபைனலில் ஆடும். அதேவேளையில் தோற்கும் அணி, செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு ஃபைனலில் சுதாரிப்புடன் ஆடும். எனவே இது இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி ஆகும்.

இந்த போட்டியில் களமிறங்கும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஆசிஃப் அலி, குஷ்தில் ஷா, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையை தூக்கியே ஆகணும்.. மேத்யூ ஹைடனை எடுத்து கடைசி நேரத்தில் சிக்ஸர் அடித்த பாகிஸ்தான் அணி

உத்தேச இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா, வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா.
 

PREV
click me!

Recommended Stories

Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?
சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!