IPL 2022: இந்த முறையும் ஐபிஎல் இந்தியாவில் இல்ல.. எந்த நாட்டில் நடக்குது தெரியுமா..? புதிய அப்டேட்

By karthikeyan VFirst Published Jan 14, 2022, 2:42 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசன் இலங்கையில் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக களமிறங்குகின்றன. அதனால் இந்த சீசனிலிருந்து ஐபிஎல் இன்னும் பிரம்மாண்டமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இந்த சீசனுக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் ஐபிஎல் 15வது சீசனை இந்தியாவில் நடத்துவது சந்தேகமாகியுள்ளது. அதேவேளையில், ஐபிஎல்லை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்தியா விரும்பவில்லை. ஏனெனில் ஐபிஎல் 13வது சீசன் மற்றும் 14வது சீசனின் 2ம் பாதி ஆகியவை அமீரகத்தில் தான் நடத்தப்பட்டன. எனவே அமீரகத்தை மட்டுமே சார்ந்திருக்க விரும்பாத பிசிசிஐ, வேறு நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளில் ஒன்றில் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியானது. இந்தியாவில் நடத்தப்படாத கடந்த 2 சீசன்களை நடத்தவும், இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த 2 சீசன்களும் அமீரகத்தில் நடத்தப்பட்டன.

இந்நிலையில், இந்த சீசனை இலங்கையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ”இலங்கையில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலை பார்த்தோம். ஐபிஎல்லை நடத்துவதில் பெருமகிழ்ச்சி. இதுதொடர்பான ஆலோசனையை விரைவில் பிசிசிஐயுடன் நடத்துவோம்” என்று இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
 

click me!