#SLvsIND 13 ஆண்டுகால இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை..! டி20 தொடரை வென்று அசத்தல்

Published : Jul 30, 2021, 10:12 AM IST
#SLvsIND 13 ஆண்டுகால இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை..! டி20 தொடரை வென்று அசத்தல்

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 2-1 என டி20 தொடரை வென்றது.  

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. 

இதையடுத்து நடந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டிக்கு முன்பாக இந்திய வீரர் க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் அவருடன் தொடர்பில் இருந்த பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர் உள்ளிட்ட முக்கியமான 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதனால் அவர்கள் இல்லாமல் கடைசி 2 டி20 போட்டிகளில் இந்திய அணி ஆட வேண்டியிருந்தது.

ஆனாலும் இருக்கிற வீரர்களை வைத்து அந்த 2 போட்டிகளை ஆடிய இந்திய அணி இரண்டிலுமே தோற்றது. பிரித்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆடாததால் கிடைத்த வாய்ப்பை, ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா ஆகிய வீரர்கள் பயன்படுத்தி கொள்ளவில்லை. 2வது டி20 போட்டியில் 132 ரன்கள் மட்டுமே இந்திய அணி அடித்த நிலையில், 133 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் அடித்து இலங்கை அணி வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்தது.

இதையடுத்து, தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்த நிலையில், அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் பேட்ஸ்மேன்களான தவான், கெய்க்வாட், படிக்கல், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா ஆகிய அனைவருமே படுமோசமாக அவுட்டாகினர். இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்கோரே, குல்தீப் யாதவ் அடித்து 23 ரன்கள் தான். அதனால் இந்திய அணி 20 ஓவரில் வெறும் 81 ரன்கள் மட்டுமே அடித்தது.

82 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்ற இலங்கை அணி, 2-1 என டி20 தொடரை வென்றது.

இந்த வெற்றியின் மூலம், தங்களுக்கு எதிரான இந்தியாவின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இலங்கை. 2008லிருந்து இலங்கைக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 21 தொடர்களை வென்றுள்ளது. டி20 கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிராக 8 தொடர்களை இந்தியா வென்றிருந்த நிலையில், இந்த தொடர் வெற்றிகளுக்கு, இந்த தொடரை வென்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது இலங்கை.
 

PREV
click me!

Recommended Stories

Virat Kohli Mental Health: 'நான் ஒரு போலி'னு தோணுது! - மனநலம் பற்றி கோலி ஓபன் டாக்
Vaibhav Suryavanshi: அந்த 'A' செலிப்ரேஷன்... சீக்ரெட்டை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!