#SLvsIND சீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்..! படுமட்டமான பேட்டிங்.. இலங்கை அசத்தல் பவுலிங்

Published : Jul 29, 2021, 08:50 PM IST
#SLvsIND சீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்..! படுமட்டமான பேட்டிங்.. இலங்கை அசத்தல் பவுலிங்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 தொடரில் இந்திய வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்துவருகின்றனர்.  

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், 2வது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றதையடுத்து டி20 தொடர் 1-1 என சமனடைந்தது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, படுமோசமாக பேட்டிங் ஆடி மளமளவென விக்கெட்டுகளை இழந்துவருகிறது.

ஷிகர் தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கிய நிலையில், தவான் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி, கோல்டன் டக்காகி வெளியேறினார். தேவ்தத் படிக்கல் 9 ரன்னிலும், சஞ்சு சாம்சன் ரன்னே அடிக்காமலும் வெளியேற, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 5 ஓவரில் வெறும் 25 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. நிதிஷ் ராணாவும் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 36 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. 10 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு வெறும் 39  ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!