#SLvsIND கடைசி டி20: இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! டாஸ் ரிப்போர்ட்

Published : Jul 29, 2021, 07:44 PM ISTUpdated : Jul 29, 2021, 07:48 PM IST
#SLvsIND கடைசி டி20: இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், 2வது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றதால் டி20 தொடர் 1-1 என சமனடைந்தது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இரு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி காயமடைந்ததால் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சந்தீப் வாரியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இலங்கை தொடர் முழுவதுமே ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது ஒரு வீரராவது இந்திய அணியில் அறிமுகமாகிவரும் நிலையில், இந்த போட்டியில் சந்தீப் வாரியர் அறிமுகமாகியுள்ளார்.

இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், சேத்தன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி.

இலங்கை அணி:

அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா(விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, தசுன் ஷனாகா(கேப்டன்), தனஞ்செயா டி சில்வா, ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணரத்னே,  நிசாங்கா, அகிலா தனஞ்செயா, துஷ்மந்தா சமீரா.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!