#ENGvsSL 3வது ஒருநாள் போட்டியிலும் மோசமான ஸ்கோருக்கு சுருண்ட இலங்கை

Published : Jul 04, 2021, 08:16 PM IST
#ENGvsSL 3வது ஒருநாள் போட்டியிலும் மோசமான ஸ்கோருக்கு சுருண்ட இலங்கை

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி வெறும் 166 ரன்களுக்கு சுருண்டது.  

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரில் இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆன இலங்கை அணி, ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்த நிலையில், 3வது போட்டி இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. மிடில் ஆர்டர் வீரர் ஷனாகா மட்டுமே சிறப்பாக ஆடி 48 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்துகொண்டே இருந்ததால், 42வது ஓவரிலேயே 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

167 ரன்கள் என்பது இங்கிலாந்து அணிக்கு மிக எளிய இலக்கும். மழை காரணமாக 2வது இன்னிங்ஸ் தாமதாகிறது.
 

PREV
click me!

Recommended Stories

Jaiswal Century: ஜெய்ஸ்வால் சதம், ஹிட்மேன் அதிரடி; ஆப்கானிஸ்தானை ஊதித்தள்ளி தொடரை வென்றது இந்தியா
Women T20 World Cup: கடைசி நேர த்ரில்.. கையை விட்டுப்போன போட்டியை தலைகீழாக மாற்றிய நியூசிலாந்து!