என்னை கவர்ந்த சமகால கிரிக்கெட் வீரர்கள் இவங்கதான் - அஃப்ரிடி

Published : Jul 04, 2021, 06:29 PM IST
என்னை கவர்ந்த சமகால கிரிக்கெட் வீரர்கள் இவங்கதான் - அஃப்ரிடி

சுருக்கம்

சமகாலத்தில் தன்னை கவர்ந்த கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆல்ரவுண்டருமான ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரிடி. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக பல ஆண்டுகளாக ஜொலித்த அஃப்ரிடி, 27 டெஸ்ட், 398 ஒருநாள் மற்றும் 99 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக ஆடியுள்ளார்.

வெவ்வேறு காலக்கட்டங்களில் தன்னை கவர்ந்த வீரர்கள் யார் யார் என்று தெரிவித்த அஃப்ரிடி, தான் பார்த்து ரசித்த, தன்னை கவர்ந்த இன்சமாம் உல் ஹக் மற்றும் சயீத் அன்வர் ஆகியோருடன் இணைந்து ஆடியது மிகப்பெரிய கௌரவம் என்று தெரிவித்தார். மேலும் தனது காலக்கட்டத்தில் பிரயன் லாரா மற்றும் மெக்ராத் ஆகிய இருவரும் தன்னை கவர்ந்த வீரர்கள் என்று தெரிவித்தார்.

சமகாலத்தில் தன்னை கவர்ந்த வீரர்கள் டிவில்லியர்ஸ், விராட் கோலி மற்றும் பாபர் அசாம் என தெரிவித்த அஃப்ரிடி, ஃபகர் ஜமான் நல்ல ஃபார்மில் ஆடும்போது பார்க்க மிகவும் பிடிக்கும் என்றார். ஃபகர் ஜமான் நன்றாக ஆடும்போதெல்லாம் பாகிஸ்தான் அணி ஒருதலைபட்சமாக போட்டியை ஜெயிக்கும் என்றும், ஆனால் அவரது கன்சிஸ்டன்ஸி தான் கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?