#BANvsSL வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு..! தூக்கியெறியப்பட்ட சீனியர் தலைகள்

Published : May 11, 2021, 09:50 PM IST
#BANvsSL வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு..! தூக்கியெறியப்பட்ட சீனியர் தலைகள்

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான 18 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. வரும் 23, 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கும் 3 போட்டிகளில் ஆடுகிறது.

அந்த தொடருக்கான 18 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 உலக கோப்பையை கருத்தில்கொண்டு இலங்கை ஒருநாள் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று அண்மையில் தகவல் வெளியான நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து திமுத் கருணரத்னே, ஆஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால் ஆகிய வீரர்கள் தூக்கியெறியப்பட்டுள்ளனர்.

சில புதுமுகங்கள் இலங்கை அணியில் வாய்ப்பு பெற்றுள்ளன. குசால் பெரேரா கேப்டனாகவும் குசால் மெண்டிஸ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி:

குசால் பெரேரா(கேப்டன்), குசால் மெண்டிஸ்(துணை கேப்டன்), ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, அசிதா ஃபெர்னாண்டோ, பினுரா ஃபெர்னாண்டோ, ஷிரான் ஃபெர்னாண்டோ, தனுஷ்கா குணதிலகா, நிசாங்கா, தனஞ்செயா டி சில்வா, ஆஷென் பண்டாரா, நிரோஷன் டிக்வெல்லா, ஷாங்கா, இசுரு உடானா, துஷ்மந்தா சமீரா, ரமேஷ் மெண்டிஸ், லக்‌ஷன் சந்தாகான், அகிலா தனஞ்செயா.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 5வது T20: மரண காட்டு காட்டிய இந்தியா.. 46 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி.யை வீழ்த்தி அசத்தல்
நாய் அடி, பேய் அடி..! டி20யில் கன்னி சதத்தை பதிவு செய்த இசான் கிஷன்.. நியூசி.க்கு 272 ரன்கள் இலக்கு