#ICCWTC இந்திய அணி நியூசிலாந்தைவிட வலுவான அணி..! நம்ம அணியில் எல்லா டிபார்ட்மெண்ட்டும் செமயா இருக்கு

By karthikeyan VFirst Published May 11, 2021, 9:07 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி, நியூசிலாந்தை விட வலுவான அணி என்றும் இந்திய அணியில் எல்லா டிபார்ட்மெண்ட்டும் சிறப்பாக இருப்பதாகவும் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஜூன் 18 முதல் 22 வரை இந்த இறுதி போட்டி நடக்கவுள்ள நிலையில், ஃபைனலுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ரஹானே, கில், மயன்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட் ஆகிய பேட்ஸ்மேன்களும், அஷ்வின், ஜடேஜா, அக்ஸர், சுந்தர் ஆகிய ஸ்பின்னர்களும் இடம்பெற்றுள்ளனர். பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களும் உள்ளனர். பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என அனைத்திலும் சிறந்த அணியாக இந்திய அணி உள்ளது.

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

கேஎல் ராகுல், ரிதிமான் சஹா.(உடற்தகுதி கண்காணிக்கப்படுகிறது)

ஸ்டாண்ட்பை வீரர்கள் - அபிமன்யூ ஈஸ்வரன், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஸான் நாக்வஸ்வாலா

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை எதிர்கொள்ளும் நியூசிலாந்தைவிட இந்திய அணி தான் வலுவாக இருப்பதாக தெரிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல்.

இந்திய அணி குறித்து பேசிய பார்த்திவ் படேல், இந்திய அணி வலுவாக உள்ளது. நியூசிலாந்து அணியுடன் ஒப்பிட்டால் இந்திய அணி மிக வலுவாக உள்ளது. அனைத்துவிதமான துறைகளையும் இந்திய அணி சிறப்பாக கவர் செய்திருக்கிறது. இங்கிலாந்தில் சிறப்பாக ஆடத்தகுந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கேஎல் ராகுலுக்கே ஆடும் லெவனில் இடம் இல்லாத அளவிற்கு பேட்டிங் வலுவாக உள்ளது.

அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் என ஸ்பின் பவுலிங்கும், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், உமேஷ் யாதவ் என ஃபாஸ்ட் பவுலிங்கும் வலுவாக உள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக இந்திய அணியுமே வலுவாக உள்ளது என்று பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.
 

click me!