#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் பெஸ்ட் ஆடும் லெவன்..! கோலி, பும்ரா ஆகிய பெரிய தலைகளே லிஸ்ட்ல இல்ல

Published : May 11, 2021, 06:15 PM IST
#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் பெஸ்ட் ஆடும் லெவன்..! கோலி, பும்ரா ஆகிய பெரிய தலைகளே லிஸ்ட்ல இல்ல

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனின் சிறந்த ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 14வது சீசனில் ஆடியவரை சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா.

இந்த சீசனில் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் அபாரமாக ஆடிய கேஎல் ராகுல் மற்றும் தவான் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரரான சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுப்ளெசிஸை 3ம் வரிசையில் தேர்வு செய்துள்ளார்.

மிடில் ஆர்டரில் ஆர்சிபியின் மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோருடன் டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய ஜடேஜா மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகிய இருவரையும், ஸ்பின்னராக ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹர் மற்றும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆவேஷ் கான் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

கோலி, பும்ரா ஆகிய மிகப்பெரிய வீரர்கள் இந்த சீசனில் சொல்லும்படியாக பெரிதாக ஆடவில்லை என்பதால் அவர்களை தேர்வு செய்யவில்லை.

ஐபிஎல் 14வது சீசனின் சிறந்த ஆடும் லெவன்:

கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஃபாஃப் டுப்ளெசிஸ், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ரிஷப் பண்ட், ஜடேஜா, கிறிஸ் மோரிஸ், ராகுல் சாஹர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!