#SLvsIND அவரு வந்துட்டா அவருதான் இந்திய அணியின் கேப்டன்.. தவான் இல்ல..!

By karthikeyan VFirst Published May 11, 2021, 9:20 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டன்சிக்கு இருவருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 

இந்திய அணி ஜூன் 18-22ல் இங்கிலாந்தில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடுகிறது. அதன்பின்னர் ஆகஸ்ட் - செப்டம்பரில் இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

இதற்கிடையே ஜூலை மாதம் இலங்கையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி ஆடவுள்ளது. அந்த காலக்கட்டத்தில் இந்திய மெயின் அணி இங்கிலாந்தில் இருக்கும் என்பதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் இடையேயான காலக்கட்டத்தில் இலங்கைக்கு வந்துவிட்டு மீண்டும் இங்கிலாந்துக்கு செல்வது சாத்தியமற்றது.

எனவே இலங்கைக்கு எதிரான தொடரில் வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் மற்றும் இந்திய அணியில் அடுத்து இடம்பெறவிருக்கும் வீரர்களை வைத்து இலங்கை தொடரில் ஆடவுள்ளது இந்திய அணி. ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய அணியாக அது இருக்கும்.

கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால் இலங்கை தொடருக்கான கேப்டன் யார் என்பதுதான் இப்போதைக்கு ஹாட் டாபிக்காக உள்ளது. அணியின் சீனியர் வீரர் என்ற முறையில் ஷிகர் தவான் தான் கேப்டன் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஐபிஎல்லில் கேப்டன்சி அனுபவம் கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் தான் கேப்டனுக்கான முதன்மை தேர்வு என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், ஜூலையில் நடக்கும் இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன் முழு ஃபிட்னெஸை அடைந்துவிடுவாரா என்பது கேள்வியாக உள்ள நிலையில், அவர் இலங்கை தொடரில் ஆடும்பட்சத்தில் அவர்தான் கேப்டன். அப்படியில்லை என்றால் ஷிகர் தவான். ஆனால் இந்த கேப்டன்சிக்கான போட்டியில் ஹர்திக் பாண்டியாவும் உள்ளார் என்ற தகவல் உள்ளது.

கேப்டன்சி பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிடமிருந்து மேலும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் என்று நம்பப்படுவதாகவும், அதனால் அவரையும் கேப்டனுக்கான ஆப்சனாக வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

click me!