கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 3ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜன் ஒரே ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 3ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார். அதன்படி முதலில் கொல்கத்தா நைட் நைடர்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.
முதலில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் பந்து வீசினார். இந்த ஓவரில் ஒரு வைட் உள்பட 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அடுத்த ஓவரை மார்கோ யான்சென் வீசினார். இந்த ஓவரில் பிலிப் சால்ட் ஹாட்ரிக் சிக்ஸர் பறக்க விட்டார். கடைசி பந்தில் சுனில் நரைன் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மீண்டும் புவனேஷ்வர் குமார் தனது 2ஆவது ஓவரை வீசி 4 ரன்கள் கொடுத்தார். பின்னர், தமிழக வீரர் நடராஜன் பவுலிங் போட வந்தார். இந்த ஓவரில் 2ஆவது பந்தில் வெங்கடேஷ் ஐயர் பவுண்டரி அடித்தார். ஆனால், அடுத்த பந்திலேயே மார்கோ யான்செனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு கேகேஆர் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். இவர், வந்த 2ஆவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக இந்த சீசனை தமிழக வீரர் சிறப்பாக தொடங்கியுள்ளார்.
மதுபான லோகோ இல்லாத சிஎஸ்கே ஜெர்சியில் விளையாடிய முஷ்தாபிஜூர் ரஹ்மானுக்கு குவியும் பாராட்டு!
தற்போது வரையில் 2 ஓவர்கள் வீசிய நடராஜன் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். கேகேஆர் அணியைப் பொறுத்த வரையில் நிதிஷ் ராணா 9, ராமன்தீப் சிங் 35, பிலிப் சால்ட் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது ரிங்கு சிங் மற்றும் ஆண்ட்ரே ரஸல் இருவரும் பேட்டிங் செய்து வருகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ராமன்தீப் சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
சப்ஸ்டிடியூட் பிளேயர்ஸ்: சுயாஷ் சர்மா, மணீஷ் பாண்டே, வைபவ் அரோரா, அங்கிரிஸ் ரகுவன்ஷி, ரஹ்மானுல்லா குர்பாஸ்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
மாயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சென், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மாயங்க் மார்கண்டே, டி நடராஜன்.
சப்ஸ்டிடியூட் பிளேயர்ஸ்: நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், கிளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா.