குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 2ஆவது அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.
அகமதாபாத்தில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 62ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியில் சஹா மற்றும் கில் இருவரும் களமிறங்கினர்.
முகமது ஷமி, மோகித் சர்மா வேகத்தில் சிக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; முதல் அணியாக பிளே ஆஃப் சென்ற GT!சஹா டக் அவுட்டில் வெளியேற, கில் அதிரடியாக ஆடி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதில் ஒரு சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகள் அடங்கும். சாய் சுதர்சன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
யாருக்கு வாய்ப்பு அதிகம்? பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணி எது?
பந்து வீச்சைப் பொறுத்த வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். முன்னணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹென்ரிச் கிளாசென் மட்டும் கடைசி வரை போராடினார்.
ஏழு விக்கெட் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 59 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் 8ஆவது விக்கெட்டுக்கு கிளாசென் மற்றும் புவனேஷ்வர்குமார் இருவரும் இணைந்து 68 ரன்கள் பார்னர்ஷிப் சேர்த்தனர். கடைசியாக கிளாசென் 64 ரன்களில் ஆட்டமிழக்க, புவனேஷ்வர்குமார் 27 ரன்களில் அட்டமிழந்தனர். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சுனில் கவாஸ்கர் சட்டையில் ஆட்டோகிராஃப் போட்ட தோனி!
இந்த தோல்வியின் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. எனினும், வரும் 18 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் 21 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுடன் மோதுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 21 ஆம் தேதி பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான ஐபிஎல் தொடரின் கடைசி லீக் 70ஆவது போட்டி நடக்கிறது.
ஆரஞ்சு கேப்:
பர்பிள் கேப்: