ஐபிஎல் 16வது சீசனில் சன்ரைசர்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் மூதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவரில் 188 ரன்கள் அடித்து, 189 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இந்த சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. இன்று நடந்துவரும் முக்கியமான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸூம், இந்த போட்டியில் ஜெயித்து பிளே ஆஃபிற்கு முன்னேறும் பின்புற வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் சன்ரைசர்ஸும் களமிறங்கின.
அகமதாபாத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் ஐடன் மார்க்ரம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
IPL 2023: பையன் பட்டைய கிளப்புறான்.. சிஎஸ்கே பேட்ஸ்மேனுக்கு புகழாரம் சூட்டிய கேப்டன் தோனி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், அப்துல் சமாத், சன்வீர் சிங், மயன்க் மார்கண்டே, மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, டி.நடராஜன்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், தசுன் ஷனாகா, ராகுல் டெவாட்டியா, மோஹித் சர்மா, ரஷீத் கான், முகமது ஷமி, நூர் அகமது.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரிதிமான் சஹா ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். அதன்பின்னர் ஷுப்மன் கில்லும் சாய் சுதர்சனும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 14 ஓவரில் 147 ரன்களை குவித்தனர். 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து சாய் சுதர்சன் அரைசதத்தை தவறவிட்டார்.
அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா(8), டேவிட் மில்லர்(7), ராகுல் டெவாட்டியா(3) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி சதமைத்தார் ஷுப்மன் கில். 58 பந்தில் 101 ரன்களை குவித்த கில்லை கடைசி ஓவரில் வீழ்த்திய புவனேஷ்வர் குமார், கடைசி ஓவரில் அதன்பின்னர் ரஷீத் கான்(0), முகமது ஷமி(0) ஆகிய இருவரையும் டக் அவுட்டாக்கினார். கில்லின் சதத்தால் 20 ஓவரில் 188 ரன்கள் அடித்த குஜராத் அணி, 189 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.