IPL 2023: பையன் பட்டைய கிளப்புறான்.. சிஎஸ்கே பேட்ஸ்மேனுக்கு புகழாரம் சூட்டிய கேப்டன் தோனி

By karthikeyan V  |  First Published May 15, 2023, 8:13 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் சிறப்பாக பேட்டிங் ஆடிவரும் ஷிவம் துபேவை பாராட்டி பேசியுள்ளார் கேப்டன் தோனி.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது இந்த சீசன். லீக் சுற்று முடிய இன்னும் சில போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், இதுவரை ஒரு அணி கூட பிளே ஆஃபிற்கு முன்னேறவில்லை. டெல்லி கேபிடள்ஸை தவிர அனைத்து அணிகளுமே பிளே ஆஃப் நம்பிக்கையுடன் போராடுகின்றன.

இந்த சீசனில் இளம் வீரர்கள் பலர் அபாரமாக பேட்டிங் ஆடி அசத்திவருகின்றனர். குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, ஷிவம் துபே ஆகியோர் அபாரமாக ஆடி அவரவர் அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்துவருகின்றனர்.

Tap to resize

Latest Videos

IPL 2023: அவன் ஆல்ரவுண்டர்லாம் இல்ல.. துண்டு துணுக்கு வீரர்.! இந்திய வீரரை கடுமையாக விமர்சித்த ஸ்காட் ஸ்டைரிஸ்

யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோர் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்று முன்னாள் வீரர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். அவர்களை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்வருகின்றனர்.

சிஎஸ்கே அணியின் ஷிவம் துபே நன்றாக ஆடி சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலுசேர்த்தாலும், அவரை இந்திய அணியில் எடுப்பது குறித்து பெரிதாக பேசப்படுவதில்லை. கேகேஆருக்கு எதிரான போட்டியில் மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்ப, 48 ரன்கள் அடித்து ஷிவம் துபே தான் சிறப்பாக ஆடி இன்னிங்ஸை முடித்து கொடுத்தார்.

அந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. ஆனாலும் போட்டிக்கு பின், ஷிவம் துபேவின் பேட்டிங்கை பாராட்டி பேசினார் சிஎஸ்கே கேப்டன் தோனி. 

IPL 2023: ஐபிஎல்லில் அதிக டக் அவுட்.. ரோஹித் சர்மாவின் மோசமான சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்

இந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் 157 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 363 ரன்கள் அடித்துள்ளார் ஷிவம் துபே. ஷிவம் துபே குறித்து பேசிய தோனி, நாங்கள் (தோனி & ஷிவம் துபே) நிறைய பேசியிருக்கிறோம். அவர் எந்தெந்த ஏரியாக்களில் மேம்பட வேண்டும் என்று பேசியிருக்கிறோம். அவர் நன்றாக ஆடிவருகிறார். ஆனால் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இன்னும் சிறப்பாக அடுத்தடுத்த போட்டிகளில் ஆட வேண்டும். இதுவரை ஆடியதில் திருப்தியடைந்துவிடக்கூடாது. மிடில் ஓவர்களில் அணிக்காக அருமையாக ஆடி கொடுத்துவருகிறார். தொடர்ச்சியாக அவர் இதேபோல் சிறப்பாக ஆடவேண்டும் என்று தோனி தெரிவித்தார்.
 

click me!