அகமதாபாத்தில் நடந்த காத்தாடி திருவிழாவில் அதிக தூரம் வரை சென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், இன்னும் உறுதியாக தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்தியாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்தியாவில் தான் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Dhruv Jurel: கிரிக்கெட் கிட் வாங்க அம்மா தங்க சங்கிலியை வித்து கொடுத்தாங்க – துருவ் ஜூரெல்!
கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இதே போன்று மற்றொரு வீரரான ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எடுக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ரிங்கு சிங்கின் நண்பருக்கு இந்திய அணியில் இடம், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு ஒவ்வொரு அணியும் பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளன. இந்த நிலையில் தான் அகமதாபாத்தில் ஐபிஎல் தீம் கொண்ட காத்தாடிகள் பறக்கும் திருவிழா நடந்துள்ளது. இதில், ஒவ்வொரு அணியின் தீம் கொண்ட காத்தாடிகள் பறக்கவிடப்பட்டன. இந்த திருவிழாவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிக தூரம் வரை சென்று வெற்றி பெற்றுள்ளது. 2ஆவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அப்துல் சமாத், அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம் (கேப்டன்), மார்கோ ஜான்சென், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், சன்வீர் சிங், ஹென்ரிச் கிளாசென், புவனேஸ்வர் குமார், மாயங்க் அகர்வால், டி நடராஜன், அன்மோல்ப்ரீத் சிங், மாயங்க் மார்கண்டே, டிராவிஸ் ஹெட், வணிந்து ஹசரங்கா, உம்ரான் மாலிக், பேட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனத்கட், ஆகாஷ் சிங், ஜாதவேத் சுப்பிரமணியன், உபேந்திரா சிங் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஷபாஸ் அகமது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஃபாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரார், கரண் சர்மா, மனோஜ் பண்டேஜ், மாயங்க் தாகர், விஜயகுமார் வைஷாக், ஆக்ஷா தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்ளே, ஹிமான்சு சர்மா, ரஜன் குமார், கேமரூன் க்ரீன், அல்ஜாரி ஜோசஃப், யாஷ் துள், டாம் கரண், லாக்கி ஃபெர்குசன், ஸ்வப்னில் சிங், சௌரவ் சவுகான்.