ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி நாளை இந்தூரில் நடக்க உள்ள நிலையில், அணியில் இந்த 2 மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பரிந்துரைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடருக்கான முதல் டி20 போட்டி கடந்த 11 ஆம் தேதி மொஹாலியில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ரிங்கு சிங்கின் நண்பருக்கு இந்திய அணியில் இடம், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்!
பின்னர், விளையாடிய இந்திய அணியில் ஷிவம் துபே சிறப்பான பங்களிப்பை அளித்ததன் மூலமாக 17.3 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து நாளை இந்தூரில் 2ஆவது டி20 போட்டி நடக்க இருக்கிறது.
எனது மகன் சமித்திற்கு நான் பயிற்சி அளிக்கவில்லை – ராகுல் டிராவிட்!
இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் அந்த 2 வீரர்களை இடம் பெறச் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா பரிந்துரை செய்துள்ளார். அதில், அவர் குல்தீப் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் இருவரையும் பரிந்துரைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
விராட் கோலி 2ஆவது டி20 போட்டியில் விளையாடுவார். சிறிய மைதானம் என்பதால், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆவேஷ் கான் அணியில் இடம் பெற வேண்டும். அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் இருப்பது முக்கியம். ஏனென்றால், ஷிவம் துபேயால் 4 ஓவர்கள் வீசுவது என்பது சவாலான ஒன்று என்று கூறியுள்ளார். முதல் போட்டியில் 2 ஓவர்கள் வீசிய ஷிவம் துபே 9 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
சுரேஷ் ரெய்னா கூறியதுபடி பார்த்தால், இந்திய அணியில்..
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங், அக்ஷர் படேல், ரவி பிஷ்னாய் அல்லது குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.