SRH vs CSK: மீண்டும் தோனி தலைமையில் களம் காணும் சிஎஸ்கே.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : May 01, 2022, 02:41 PM IST
SRH vs CSK: மீண்டும் தோனி தலைமையில் களம் காணும் சிஎஸ்கே.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் சிஎஸ்கேவும் மோதுகின்றன.

சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் அருமையாக விளையாடி வெற்றிகளை பெற்றுக்கொண்டிருக்கிறது. தொடர் வெற்றிகளை பெற்றுவந்த சன்ரைசர்ஸ் அணி கடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் தோல்வியடைந்த நிலையில், தோல்வியிலிருந்து மீண்டு மீண்டும் வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் வெற்றியை எதிர்நோக்கி சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது.

சன்ரைசர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அந்த அணி கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச சன்ரைசர்ஸ் அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷஷான்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், மார்கோ யான்சென், உம்ரான் மாலிக்.

சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து ஜடேஜா விலகியதையடுத்து, இந்த போட்டியில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி களமிறங்குகிறது. சிஎஸ்கே அணியின் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் இருக்காது. அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் சிஎஸ்கே அணி களமிறங்கும்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ட்வைன் ப்ரிட்டோரியஸ், ட்வைன் பிராவோ, முகேஷ் சௌத்ரி, மஹீஷ் தீக்‌ஷனா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சஞ்சு சாம்சன் ஆவேசம்.. வலியால் துடித்து அலறிய அம்பயர்.. பதறிய‌ கம்பீர்.. என்ன நடந்தது?
இங்கிலாந்தை கதறவிட்ட ஹெட் 'மாஸ்டர்'.. அட்டகாசமான சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!