தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மீது கொலைவெறி தாக்குதல்..! மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பரிதாபம்

Published : Jun 01, 2022, 10:23 AM IST
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மீது கொலைவெறி தாக்குதல்..! மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பரிதாபம்

சுருக்கம்

தென்னாப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.  

20 வயதான இளம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ. தென்னாப்பிரிக்க அண்டர் 19 அணியில் ஆடியவர் மாண்ட்லி குமாலோ.

தொழில்முறை கிரிக்கெட் வீரராக தனது ஆரம்பக்கட்டத்தில் உள்ள மாண்ட்லி குமாலோ இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டரில் பப் ஓன்றின் வெளியே கடுமையாக தாக்கப்பட்டார். தனது அணியின் வெற்றியை கொண்டாட்டத்தின்போது, பிரிட்ஜ்வாட்டரின் பப்பிற்கு வெளியே குமாலோ மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஆனால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள நார்த் பீதர்டன் கிரிக்கெட் கிளப்பில் ஆடிவரும் குமாலோவின் இந்த நிலை குறித்து அந்த கிரிக்கெட் கிளப் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!