முதல் வெற்றிக்காக முட்டி மோதும் South Africa vs West Indies டாஸ் ரிப்போர்ட்..! இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம்

Published : Oct 26, 2021, 03:23 PM IST
முதல் வெற்றிக்காக முட்டி மோதும் South Africa vs West Indies டாஸ் ரிப்போர்ட்..! இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.   

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாயில் நடக்கிறது.

இந்த இரு அணிகளுமே அவை ஆடிய முதல் போட்டியில் தோல்வியை தழுவின. தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவிடமும், வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்திடமும் தோல்வியை தழுவிய நிலையில், இந்த போட்டியில் முதல் வெற்றியை எதிர்நோக்கி இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இந்த போட்டிக்கான இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பரும் தொடக்க வீரருமான குயிண்டன் டி காக் ஆடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக தொடக்க வீரராக ரீஸா ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஹென்ரிச் கிளாசன் விக்கெட் கீப்பிங் செய்வார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒபெட் மெக்காய்க்கு பதிலாக ஹைடன் வால்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா(கேப்டன்), ரீஸா ஹென்ரிக்ஸ், ராசி வாண்டெர் டசன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன்(விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ட்வைன் ப்ரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, ஷாம்ஸி.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

எவின் லூயிஸ், லெண்டல் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), கைரன் பொல்லார்டு(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ட்வைன் பிராவோ, அகீல் ஹுசைன், ஹைடன் வால்ஷ், ரவி ராம்பால்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND VS NZ முதல் டி20.. ஷ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு 'ஆப்பு' வைத்த இளம் வீரர்.. பிளேயிங் லெவன்!