IND vs SA: 2வது டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்..! தென்னாப்பிரிக்க அணியில் 2 மாற்றங்கள்

Published : Jun 12, 2022, 06:44 PM IST
IND vs SA: 2வது டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்..! தென்னாப்பிரிக்க அணியில் 2 மாற்றங்கள்

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 211 ரன்கள் அடித்தும், 212 ரன்கள் என்ற கடின இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி தோற்றது.

முதல் டி20 போட்டியில் ஜெயித்த தென்னாப்பிரிக்க அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2வது டி20 போட்டி இன்று கட்டாக்கில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கையில் காயம் காரணமாக குயிண்டன் டி காக் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசன் ஆடுகிறார். இளம் வீரர் ஸ்டப்ஸுக்கு பதிலாகரீஸா ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.

தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), ரீஸா ஹென்ரிக்ஸ், ராசி வாண்டர் டசன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), ட்வைன் ப்ரிட்டோரியஸ், வைன் பார்னெல், கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

2006-ல் ஆக்கி.. 2026-ல் கிரிக்கெட்.. 42 வயது சகலகலா வீரர்.. ஆனால் முதல் மேட்ச்சில் நடந்த சோகம்!
T20 WC IND vs NAM.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. மேட்ச் வின்னர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!