IND vs SA: ரிஷப் பண்ட் கேப்டன்சி நல்லாதான் பண்ணாரு..! பவுலர்கள் நாங்கதான் சொதப்பிட்டோம் - புவனேஷ்வர் குமார்

Published : Jun 12, 2022, 06:33 PM IST
IND vs SA: ரிஷப் பண்ட் கேப்டன்சி நல்லாதான் பண்ணாரு..! பவுலர்கள் நாங்கதான் சொதப்பிட்டோம் - புவனேஷ்வர் குமார்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரிஷப் பண்ட் கேப்டன்சி நன்றாகவே செய்ததாகவும், பவுலர்கள் தான் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் புவனேஷ்வர் குமார் கருத்து கூறினார்.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 211 ரன்கள் அடித்தும் கூட, 212 ரன்கள் என்ற கடின இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 

டேவிட் மில்லரும், வாண்டர் டசனும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 20வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்க அணி.

அந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு ரிஷப் பண்ட்டின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என விமர்சிக்கப்பட்டது. இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலுக்கு வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வழங்கியது, பவுலர்களை சரியாக பயன்படுத்தாதது என கேப்டன்சியில் சொதப்பியதாக விமர்சனம் எழுந்தது.

ஆனால் உண்மையாகவே இந்திய அணியின் தோல்விக்கு பவுலர்கள் சரியாக செயல்படாததுதான் காரணம் என்று சீனியர் பவுலர்  புவனேஷ்வர் குமார் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய புவனேஷ்வர் குமார், ரிஷப் பண்ட் இளம் கேப்டன். அதுதான் கேப்டனாக அவருக்கு முதல் போட்டி. போகப்போக அவரது கேப்டன்சி திறனை வளர்த்துக்கொள்வார் என்று நம்புகிறேன். ஒரு அணி நன்றாக செயல்பட்டால்தான் கேப்டன் நல்ல கேப்டனாக திகழமுடியும். முதல் டி20 போட்டியில்  பவுலர்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதுதான் ரிஷப் மீதான விமர்சனத்துக்கு காரணமாக அமைந்தது. நாங்கள் நன்றாக பந்துவீசியிருந்தால், ரிஷப் பண்ட்டின் முடிவெடுக்கும் திறனை அனைவரும் மெச்சியிருப்பார்கள் என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!