
வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 2-0 என பாகிஸ்தான் அணி தொடரை வென்றுவிட்டது.
3வது போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் பாகிஸ்தானும், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸும் இன்று மோதுகின்றன.
முல்தானில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியில் 23 வயதான இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாநவாஸ் தஹானி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். ஷாஹீன் ஷா அஃப்ரிடி அவருக்கு கேப் கொடுத்தார்.
பாகிஸ்தான் அணி:
ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாநவாஸ் தஹானி, முகமது வாசிம் ஜூனியர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், ஷமர் ப்ரூக்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல், ரொமாரியோ ஷெஃபெர்டு, கீசி கார்ட்டி, அகீல் ஹுசைன், கீமோ பால், ஜெய்டன் சீல்ஸ், ஹைடன் வால்ஷ்.