வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக தனது 150ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா வீரர் குயீண்டன் டி காக் 174 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 23 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையின் லீக் போட்டி தற்போது மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி விக்கெட் கீப்பர் குயீண்டன் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Hangzhou 4th Asian Para Games, Powelifting: பளூதூக்குதல் 65 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்ற அசோக்!
இதில், ஹெண்ட்ரிக்ஸ் 12 ரன்களில் ஷோரிஃபுல் இஸ்லாம் பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து ரஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்கி 1 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு கேப்டன் எய்டன் மார்க்ரம் களமிறங்கினார். மார்க்ரம் மற்றும் டி காக் இருவரும் இணைந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் டி காக் 47 பந்துகளில் தனது 31ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். அதன் பிறகு மார்க்ரம் ஒரு நாள் போட்டியில் தனது 9ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். அவர், 69 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு தான் ஹென்ரிச் கிளாசென் களமிறங்கினார்.
அப்போது தென் ஆப்பிரிக்கா அணி 31 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 169 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து டிகாக் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தை பதிவு செய்தார். 5 ஆவது போட்டியில் விளையாடிய டி காக் இந்தப் போட்டியில் 101 பந்துகளில் 100 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இது அவரது 150ஆவது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் டிக் காக் அடித்துள்ள 20ஆவது சதம் இதுவாகும். குயீண்டன் டிகாக் தனது 50ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 103 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது 100ஆவது ஒரு நாள் போட்டியில் டக் அவுட்டில் வெளியேறினார். இந்த நிலையில் தான் இன்று தனது 150ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய டி காக் சதம் அடித்துள்ளார். அதனை இரட்டை சதம் நோக்கி கொண்டு சென்ற அவர் 174 ரன்களில் ஆட்டமிழந்தார்.
4th Asian Para Games: வட்டு எறிதல் F54/55/56 பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றிய இந்தியா!
டி காக் 140 பந்துகளில் 15 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்பட 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக உலகக் கோப்பையின் 48 ஆண்டு வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சரித்திர சாதனையை குயீண்டன் டி காக் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் எடுத்த 149 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஒரு நாள் போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பராக குயீண்டன் டி காக் 178 ரன்கள் வரையில் எடுத்துள்ளார். ஆனால், 2005 ஆம் ஆண்டு ஒரு விக்கெட் கீப்பராக ஒரு அடித்த 183* ரன்கள் சாதனையை இதுவரையில் எந்த விக்கெட் கீப்பரும் முறியடிக்கவில்லை. எனினும் உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா வீரராக குயீண்டன் டி காக் 2ஆவது அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் – இந்த கிரகத்தில் எளிமையான மனிதர் – ரஜினியை சந்தித்த இர்பான் பதான்!
இதற்கு முன்னதாக கேரி கிர்ஸ்டன் 188* ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். டிவிலியர்ஸ் 162* ரன்கள் எடுத்திருந்தார். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனி ஒரு வீரராக அதிக ரன்கள் (174) எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளில் 357 ரன்கள் குவித்து குயீண்டன் டி காக் முதலிடம் பிடித்துள்ளார். விராட் கோலி 353 ரன்களுடன் 2ஆவது இடத்திலும், ரோகித் சர்மா 311 ரன்களுடன் 3ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.
10 மீ ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு வெள்ளிப் பதக்கம்!