அபாரமான கேட்ச்சை அசால்ட்டா பிடித்த சஹா.. 2வது இன்னிங்ஸில் டுப்ளெசிஸ் எடுத்த அதிரடி முடிவு

By karthikeyan VFirst Published Oct 13, 2019, 10:43 AM IST
Highlights

முதல் இன்னிங்ஸில்  326 ரன்கள் பின் தங்கியநிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் முதல் 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்டது. 
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 601 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாள் இறுதியில் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டமுடிவில் முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்கான ஸ்கோரைக்கூட தென்னாப்பிரிக்க அணி தவிர்க்காமல் ஆல் அவுட்டானது. இதையடுத்து ஃபாலோ ஆன் பெற்ற தென்னாப்பிரிக்க அணி, நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டீன் எல்கரும் மார்க்ரமும் களத்திற்கு வந்தனர். இஷாந்த் சர்மா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே மார்க்ரமை எல்பிடபிள்யூ செய்து டக் அவுட்டாக்கி அனுப்பினார். முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்க அணிக்கு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில், அதை அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் எல்கருடன் ஜோடி சேர்ந்தார் டி ப்ருய்ன். 

ஆனால் டி ப்ருய்னும் களத்தில் நிலைக்கவில்லை. உமேஷ் யாதவ் லெக் திசையில் வீசிய பந்தை பின்பக்கம் தட்டிவிட நினைத்து அதை அடித்தார் டி ப்ருய்ன். ஆனால் அதை அபாரமாக டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்து மிரட்டினார் சஹா. தென்னாப்பிரிக்க அணி 21 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், இதுவரை ஐந்தாம் வரிசையில் இறங்கிவந்த கேப்டன் டுப்ளெசிஸ், இந்த முறை நான்காம் வரிசையில் பேட்டிங் ஆட வந்துவிட்டார். 

இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை டெம்பா பவுமா தான் நான்காம் வரிசையில் இறங்கினார். ஆனால் அவர் ஒரு இன்னிங்ஸில் கூட சரியாக ஆடாததால், இந்த முறை கண்டிப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டும் என்பதால் டுப்ளெசிஸே நான்காம் வரிசையில் இறங்கிவிட்டார். 

click me!