முன்னாள் சிஎஸ்கே ஆல்ரவுண்டரின் அதிரடியால் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Mar 12, 2020, 10:08 AM IST
Highlights

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 
 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி20 தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. இந்த தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 5 நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு ஆடுகின்றனர். 

மும்பை டிஒய் பாட்டில் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியில் சந்தர்பால், லாரா, டேரன் கங்கா, ஹூப்பர் என யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. எனவே வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவரில் 143 ரன்கள் அடித்தது. 

144 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் ஒரு ரன்னிலும் மற்றொரு தொடக்க வீரர் வான் விக் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க, ருடோல்ஃப் மற்றும் ஜார்ஸ்வெல்டு ஆகிய இருவரும் தலா 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து 8.4 ஓவரில் வெறும் 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணி. அதன்பின்னர் ஜாண்டி ரோட்ஸூம் ஆல்பி மோர்கலும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலிங்கை பொளந்துகட்டினர். இருவருமே அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். 

Also Read - தனது கெரியரில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டப்போகும் கோலி.. சர்வதேச கிரிக்கெட்டில் 2வது இந்திய வீரர்

அதிலும் ஆல்பி மோர்கலின் ஆட்டம் மிக மிக அபாரம். வெறும் 30 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 180 ஸ்டிரைக் ரேட்டுடன் 54 ரன்களை விளாசி 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற உதவினார் மோர்கல். கேப்டன் ஜாண்டி ரோட்ஸும் அதிரடியாக ஆடி 40 பந்தில் 53 ரன்களை விளாசினார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற செய்தார். 

தென்னாப்பிரிக்க அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஆல்பி மோர்கல், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக ஆடி இதேபோன்ற அதிரடியான பேட்டிங்கால் பல போட்டிகளில் வெற்றியை தேடிக்கொடுத்தவர். 
 

click me!