இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Mar 10, 2020, 5:45 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். 

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் போட்டி வரும் 12ம் தேதி தர்மசாலாவில் நடக்கவுள்ளது. 2 மற்றும் 3வது போட்டிகள் முறையே லக்னோ மற்றும் கொல்கத்தாவில் 15 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவுள்ளன. 

இந்த தொடருக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி இதுதான்.. 

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில்.

காயத்தால் கடந்த சில தொடர்களில் ஆடாத ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகிய மூவரும் காயத்திலிருந்து மீண்டும் முழு உடற்தகுதியுடன் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளனர். 

வரும் 12ம் தேதி நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். 

தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும் பிரித்வி ஷாவும் இறங்குவார்கள். கேஎல் ராகுல் ஒருநாள் போட்டியில் ஐந்தாம் வரிசையில் தான் இறங்குவார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதால், அவர் தொடக்க வீரராக இறங்க வாய்ப்பில்லை. மூன்றாம் வரிசையில் கோலி, நான்காம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், ஐந்தாம் வரிசையில் ராகுல் ஆகியோர் இறங்குவார்கள்.

ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பிவிட்டதால், அவர் ஆறாம் வரிசையில் இறங்குவார். கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்வார் என்பதால் ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இருக்கமாட்டார். இந்திய ஆடுகளங்கள் ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் அணியில் இருப்பார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமாரும், பும்ராவும் ஆடுவார்கள். மூன்றாவது ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சனாக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அதனால் இன்னொரு ஃபாஸ்ட் பவுலர் தேவையில்லை என்பதால் நவ்தீப் சைனி ஆடும் லெவனில் இருக்கமாட்டார். 

Also Read - கோலி சொல்லியும் திருந்தாத புஜாரா.. ரஞ்சி ஃபைனலில் படுகேவலமான பேட்டிங்.. பொறுமையை சோதித்த புஜாரா

முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா.
 

click me!