கோலி சொல்லியும் திருந்தாத புஜாரா.. ரஞ்சி ஃபைனலில் படுகேவலமான பேட்டிங்.. பொறுமையை சோதித்த புஜாரா

By karthikeyan VFirst Published Mar 10, 2020, 5:15 PM IST
Highlights

ரஞ்சி இறுதி போட்டியில் புஜாராவின் படுமோசமான பேட்டிங் எதிரணியை மட்டுமல்லாமல் அந்த போட்டியை பார்த்தவர்களையும் சேர்த்து கடுப்பேற்றியது. 
 

சவுராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி ராஜ்கோட்டில் நடந்துவருகிறது. ரஞ்சி இறுதி போட்டி டிராவில் முடிந்தால், முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த அணி தான் கோப்பையை வெல்லும். 

எனவே முதலில் பேட்டிங் ஆடிவரும் சவுராஷ்டிரா அணி வீரர்கள் போட்டியை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடாமல், எத்தனை நாட்கள் பேட்டிங் ஆடினாலும் சரி, ஆனால் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் மந்தமாக பேட்டிங் ஆடினர். 

அதிலும் மந்தமாக ஆடுவதற்கே பெயர்போனவரான புஜாராவின் பேட்டிங் படுமோசம். சிங்கிள் கூட தட்டாமல், ரொம்ப மோசமாக ஆடிய புஜாரா, 237 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் ஆர்ப்பிட் வசவடா, 287 பந்தில் 106 ரன்கள் அடித்தார். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவருமே இப்படித்தான் ஆடினர். இரண்டாம் நாளான இன்றைய ஆட்டமே முடிந்துவிட்டது. ஆனால்  இரண்டு நாள் முழுவதும் பேட்டிங் ஆடி 160 ஓவர்களில் 364 ரன்கள் மட்டுமே சவுராஷ்டிரா அணி 

Also Read - கண்டவங்க பேசுறத பத்தியெல்லாம் கவலையில்ல.. ஆஸி., உலக கோப்பை வின்னிங் கேப்டனுக்கு டிரெண்ட் போல்ட் பதிலடி

அணிக்கு எந்த வித பயனும் அளிக்காத படுமந்தமான புஜாராவின் பேட்டிங்கை அண்மையில் தான், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இடையே கேப்டன் கோலி கடுமையாக விமர்சித்திருந்தார். சர்வதேச போட்டியில் தான் அப்படியென்றால், அதைவிட மோசமாக ரஞ்சியில் ஆடியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் புஜாரா, ரஞ்சி தொடரில் இவ்வளவு மோசமாக ஆடியுள்ளார். சர்வதேச போட்டியில் ஆடும் வீரரின் ஆட்ட தரத்தில் இல்லை அவரது பேட்டிங். 
 

click me!